×

பென்னலூர் பகுதியில் மலேரியா விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: உலக மலேரியா தினத்தையொட்டி, பென்னலூர் பகுதியில் மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், பென்னலூர் பகுதியில் செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு, மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் ஷியாம் சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குமார் வரவேற்றார்.

முகாமில், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், தரணிதரன், நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் _பெரும்புதூர், பென்னலூர், மொளச்சூர் ஆகிய பகுதியில் உள்ள செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில், மலேரியா நோய் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கொசு ஒழிப்பு மற்றும் மலேரியா நோய் அறிகுறிகள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது. அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், ஊழியர்கள் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

The post பென்னலூர் பகுதியில் மலேரியா விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Malaria Awareness Camp ,Bennalore ,Sripurudur ,World Malaria Day ,Malaria Prevention Awareness Camp ,World malaria ,Pennalore ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு தனியார்...